லால்குடியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை .
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
மாவட்டச் செயலாளர் ப.குமார் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டம் புள்ளம்பாடி எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என்.சிவக்குமார், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் டி.என்.டி நடேசன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர்கள் பிச்சை பிள்ளை, ஜெயசீலன்,நகரச் செயலாளர் பொன்னி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள்ராஜ் வரவேற்புரை ஆற்றினார் .
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர். காந்தி, மாவட்ட செயலாளர் ப. குமார்,தலைமைக் கழகப் பேச்சாளர் சந்தானம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மகளிர் அணி செல்வி மேரி ஜார்ஜ், பாசறை அருண் நேரு மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.