Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது .

0

'- Advertisement -

Ad banner

எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் பெல் தொழிற்சங்க வாயிலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனமான எம் ஜி ஆரின் 108 -வது பிறந்த நாள் விழாவை இன்று அதிமுக கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர் .

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி திருவெறும்பூர் பெல் தொழிற்சங்க நுழைவு வாயிலில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கலைப் பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, சுப்ரமணி, கழக அமைப்பு செயலாளர் சாந்தி ,வடக்கு ஒன்றிய செயலாளர்
எஸ்.கே.டி. கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர். எஸ் எஸ் ராவணன், துவாக்குடி நகர அவை தலைவர் சுரேஷ், நகரச் செயலாளர் எஸ்.பி. பாண்டியன், துணை செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் செந்தில்குமார் , கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணியன், திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், தண்டபாணி வக்கீல்கள் சின்னத்துரை, கணேசன்,கூத்தப்பார் பேரூராட்சி முன்னாள் தலைவர் தனபால் , துவாக்குடி நகராட்சி கவுன்சிலர் சாருமதி, வேங்கூர் தங்கமணி , சாம்பு, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஆர்டிஸ்ட் தேவகுமார், நவல்பட்டு பாலமூர்த்தி, காட்டூர் அம்மன் மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி முருகா,41 வது வட்டச் செயலாளர் அபிமன்யு, தகவல் தொழில் நுட்ப அணி ஜெயந்தி,மகளிர் அணி நந்தினி சத்தியமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவெறும்பூர் கடைவீதியில் 40 வட்டச் செயலாளர் ரோஷன் தலைமையில் எம்ஜிஆர் படத்திற்கு ப.குமார் மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் அவைத்தலைவர் சுவாமிநாதன் கே என் ரமேஷ், மலைக்கோயில் குழந்தை வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.