திருச்சி ஸ்ரீரங்கத்தில்
செல்போன் கடையில் ரூ 50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு
மர்ம ஆசாமிகளுக்கு வலை வச்சு
திருச்சி திருவானைக்காவல் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கோதண்ட ராமானுஜம். இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மர்ம அசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 23,000 பணம் மற்றும் ஸ்மார்ட் போன்,ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அவற்றின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து கோதண்டராமானுஜம் திருவரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கோதண்ட ராமானுஜம் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.