திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் திருச்சி கலெக்டரிடம் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்.
திருச்சி அதிமுக புங்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம்.
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து.
புங்கனூரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
.
திருச்சி மாநகராட்சி உடன் அருகில் உள்ள அதவத்தூர், அல்லித்துறை, வயலூர், வாளாடி, புங்கனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அந்தந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல், போராட்டம் நடத்தி பல்வேறு வகையில் தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புங்கனூர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் இடம் ரேசன் கார்டு ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை புங்கனூர் கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தனர்.இந்த நிலையில் தகவல் அறிந்து மணிகண்டம் போலீசார் அதிகாலையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற பொது மக்களை கிராமத்திலே தடுத்து நிறுத்தினார்கள்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராமத்தில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து வந்தனர்.
இந்த போராட்டத்தில்
ஊர் பட்டியதாரர் நந்தகுமார்,
த.மா.கா.கொள்கை பரப்பு செயலாளர் திருவரங்கம் மதிவாணன், டெல்டா மாவட்ட மகளிர் அணி தலைவர்
கிருஷ்ணவேணி மதிவாணன். த.மா.கா. தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் ,மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, செல்வம், ஐஜேகே சார்பில் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் ஏராளமான பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிறகு தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் , ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் அளித்த மனுக்கள் குறித்து மேல் அரசுக்கு அனுப்பி சுமுக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் புங்கனூர் பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைத்து சென்றனர்.
காலையில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் மதியம் மதியம் வரை நடைபெற்றது.