ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு .
போலீசார் விசாரணை
திருவரங்கம் தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர்
முத்துலட்சுமி (வயது 37) இவர் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் செல்வகுமார் (வயது 43. ) மது பழக்கத்திற்கு அடிமையானவர்.
இந்த நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வரும் எனக் கூறப்படுகிறது . இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார் .
மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் குடிப்பழக்கத்தை அவர் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது .
இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்த செல்வகுமாரை ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.