திருச்சியில் வரும் 12 ஆம் தேதி 12,000 பேர் பங்கு பெறும் சிலம்பம் உலக சாதனை கின்னஸ் நிகழ்ச்சி. அனுமதி கட்டணம் இலவசம் .
உலக சாதனை நிகழ்வு, சிலம்பத்தில் உலகிலேயே முதன்முதலாக 12,000 வீரர்-வீராங்கனைகளை கொண்டு நடத்தும் உலக சாதனை நிகழ்வு
ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்வு
மேற்கண்ட சிலம்பாட்டம் 12251 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் இணைந்து உலக சாதனை நிகழ்வாக வருகிற 12.01.2025 ஆம் தேதியன்று முதலியார் சத்திரம், குட்செட் ரோடு, இரயில்வே பெல்ஸ் கிரவுண்டில் மாலை 4:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்த கின்னஸ் சாதனையானது இந்திய சிலம்ப சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. முரளிசங்கர், திருச்சி ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஓங்கார குடில் நிறுவனர் ஸ்ரீவேலு தேவர் அய்யா தலைமையில் நடைபெற உள்ளது.