Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்தடை .

0

'- Advertisement -

Ad banner

திருச்சி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதா் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டா்வொத் சாலை, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, நகர ரயில் நிலையம், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் வரும் 3-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.