திருச்சி பாலக்கரையில
போதை மாத்திரைகள் விற்ற தாய் கைது மகன் தப்பி ஓட்டம் .
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை, பசுமடம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது .
இதையடுத்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி,
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சன்னாசி தலைமை காவலர் அஜ்மல் கான் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கிருந்து வாலிபர் தப்பி ஓடிவிட்டார். அந்த பெண்ணை பிடித்து விசாரிக்கும் போது அவர் திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லாஷா என்பவரது மனைவி பரக்கத் நிஷா
(வயது39 )என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய வாலிபர் அவருடைய மகன் முகமது (வயது 20) என்பதும் தெரியவந்தது.
கைதான பரக்கத் நிஷாவிடம் இருந்து 19 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய பராக்கத் நிஷாவின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.