Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய பயிற்சி வகுப்பு.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (11/12/2024) அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் Truth lab chennai இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது .

இந்த பயிற்சி வகுப்பில் தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்க உரை அளித்தனர் .

பயிற்சி வகுப்பை மாண்புமிகு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைத்தார் .

இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார் இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.