கோர்ட் உத்தரவை மதிக்காததால் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி. பேருந்து நிலையத்தில் பரபரப்பு.



திருச்சி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் இவர் கடந்த 23.03.2021- ம் தேதியன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இறந்துவிட்டார்.
எனவே இறந்து போன வள்ளியம்மாளின் மகாலட்சுமி, கண்ணியம்மாள் ஆகிய இரண்டு மகள்களும் வள்ளியம்மையின் மரணத்திற்கு காரணமாகிய விபத்தை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மீது திருச்சி SDJ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை திருச்சி பாலக்கரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ் கெவின் என்பவர் நடத்தி வந்த நிலையில் கடந்த 3.11.2023-ம் தேதியில் திருச்சி SDJ நீதிமன்றம் மனுதாரர்களுக்கு ரூபாய் 10,22,062/- நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்ட பின்னும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்படி தொகையினை மனுதாரர்களுக்கு செலுத்தாத காரணத்தினால் இன்று (12.12.2024) திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

