Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். திருச்சி அதிமுக 65 வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி மேயருக்கு கோரிக்கை.

0

 

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி,ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள்,உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் அதிமுக மாமன்ற தலைவர்
அம்பிகாபதி பேசும்போது :-

புதிதாக போடப்பட்ட சாலைகள் சேதமடையாமல் இருக்க, போதுமான மழைநீர் வடிகால் பாதையை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும். காலம் தாழ்த்தினால் சாலைகள் மேலும் மோசமாக கூடும் எனவே உடனடியாக மேயர் அவர்கள் மழை நீர் வடிகால் பாதையை உடனடியாக ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்கிறேன் .

தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இருக்கும் பகுதி சேறும் சகதியுமாக உள்ள இடத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

மேலும் பல நாட்களாக எனது வார்டில் நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்து வருகிறேன் அதை உடனடியாக கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.