ஜனவரி முதல் வாரத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கட்டாயம் வழங்கப்படும். அமைச்சர் காந்தி.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 14, 15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.
இதனை ஒட்டி வழங்கப்படும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இலவச வேட்டி சேலைகள் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி சேலைகள் கொடுக்கப்படும். இலவச வேட்டி சேலைகளுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு , பொங்கல் பரிசு தொகையும் கொடுக்கப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலைகள் கொடுக்கப்பட இருக்கிறது,
இது குறித்து அமைச்சர் காந்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதில் விலையில்லா வேட்டி சேலை திட்டத்தினை பொருத்தமட்டில் உற்பத்திக்கு தேவையான தரமான நூல்கள் மூலமாக பொங்கல் 2025க்கு 177.64 லட்சம் எண்ணிக்கையிலான சேலை மற்றும் 177.22 லட்சம் எண்ணிக்கையிலான வேட்டிகள் 23 91 எண்ணிக்கையிலான கைத்தறிகள் மூலம் தயாராகி கொண்டிருக்கிறது, 12 040 எண்ணிக்கையிலான பெடல் தறிகள் மற்றும் 54 193 எண்ணிக்கையிலான விசைத்தறிகளின் வாயிலாக தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களால் மட்டுமே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை பல்வேறு தர பரிசோதனைகள் செய்யப்பட்டு கொள்முதல் செய்து தமிழக மக்களுக்கு பொங்கல் நாளன்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
பொங்கல் பரிசு பொங்கல் பண்டிகையை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை கரும்பு முதலிய பரிசு தொகுப்பையும் மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் தமிழக அரசு சார்பில் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,
ஜனவரி முதல் வாரம் இதன் மூலம் பொங்கல் பண்டிகையின் போது தரமான இலவச வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையுடன் கூடிய இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது சர்க்கரை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகப்பு இலவச வேட்டி சேலைகள் மற்றும் ரொக்க பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.