தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி .
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக, மோதியது.
இதில், அந்த தனியார் பஸ்சில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பஸ்சில் பயணம் செய்த, புதுக்கோட்டையை சேர்ந்த ஆபினாபீவி, (வயது 55), பஸ் சீட்டில் அமர்ந்தவாரே உயிரிழந்தார்.
மாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .