பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கும் திருச்சிஅமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, இவ்விரு கடைகளுக்கும் முறையே, கடந்த நவம்பர் 1 மற்றும் 8 தேதி ஆகிய தேதிகளில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் கடிதம் கொடுத்து இருந்தார்கள்.
ஆனால் இவ்விரு உண்ணாவிரத போராட்டங்களுக்கும் உறையூர் காவல் நிலையம் அனுமதி அளிக்கவில்லை.
அரசாங்கத்தின் தடைகளை மீறி இரண்டு முறையும் உண்ணாவிரதம் இருக்க முயன்ற, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் தலைமையிலான அமமுக நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, இரண்டு மதுபான கடைகளையும் நிரந்தரமாக மூடக்கோரி, உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டி, மாண்புக்குரிய மதுரை உயர்நீதிமன்ற கிளையை திருச்சி மாநகர் மாவட்ட அமமுகவினர் நாடினர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று மாண்புக்குரிய மதுரை உயர்நீதிமன்ற கிளை, டிசம்பர் 2-ம் தேதி அன்று, உறையூர் குறத் தெருவில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளது (WP (MD)/27354/2024) .
நீண்ட வருடங்களுக்குப் பிறகு, திருச்சி மாநகரில் மதுபான கடைகளை மூடுவதற்கு, உண்ணாவிரதம் இருக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கி இருப்பதால்,
இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு, மதுபானங்களால் பாதிக்கப்பட்டவர்களையும், இவ்விரு கடைகளையும் எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர்களையும் தொடர்பு கொண்டு ஒன்றிணைந்து போராட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பேசி வருகின்றனர்.
முன்னதாக உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமமுகவினரிடம் பெருமளவில் பேரம் பேசப்பட்டு வருகிறது என புரளி கிளப்பப்பட்டது. ஆனால் அது முற்றிலும் தவறு என்று அப்போதே மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கூறினார், தற்போது அதை நிரூபிக்கும் வகையில் இரு கடைகளையும் மூடும் வரை ஓயமாட்டேன் என உயர் நீதிமன்ற அனுமதி உடன் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .