Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. 57 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மது பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா? என கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் பாரதியார் சாலை, , பஸ் நிலைய பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது பாரதியார் சாலையில் ஒரு மதுக்கடை அருகில் நின்று மது விற்று கொண்டிருந்த பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரயில் நிலையம் அருகில் ஹோட்டல் அருகே நின்று மது விற்றதாக எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த சங்கர் என்பவரை திருச்சி மாநகர மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.