திருவெறும்பூரில் ரூ.1,31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் புதிய பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய புதிய பாலம் கவுறு வாய்க்காலில் ரூபாய் ஒரு கோடியே 31 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இந்தப் பாலம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் ஒரு வழி பாதையாக பைபாஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றன , விபத்துக்களை தவிப்பதற்காக இப்பாலம் கட்டப்படுகிறது.
இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். இது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்நிகழ்வில் மண்டலகுழு தலைவர் மு.மதிவாணன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி , மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் நலச்சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.