திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த தம்பதியினர் .
திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த தம்பதியினர் .
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி உதயா (வயது 37)இவர் திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இவரின் இரண்டு பெண் குழந்தைகள் இரவு வீட்டின் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பி வந்தபோது கதவை மூடாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில் வீட்டுக்குள் மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்து தலையணையில் இருந்த இரண்டு செல்போன் கடை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார். இதனை பார்த்த உதயா மற்றும் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோர் அந்த மர்ம ஆசாமியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசானையின் போது வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை திருட முயன்றது அரியமங்கலம் மேல் அம்பிகாபுரம் எம்ஜிஆர் தெரு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்வேலை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.