நாளை நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை பொதுக்கூட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எடத்தெரு அண்ணா சிலை அருகே நாளை (ஞாயிறு) அன்று மாலை நாலு மணி அளவில் நடைபெற உள்ளது .
திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில்
தலைமை நிலையசெயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானதொட்டியம் ராஜசேகரன்,
கழக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் KVD கலைச்செல்வன்,
இதய தெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை மாநில துணை செயலாளர் டோல்கேட் கதிரவன்
சிறுபான்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் பசீர் அகமது
வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ராஜா ராமநாதன்,
தலைமை கழக பேச்சாளர் நெல்லை லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், வட்டக் செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாள சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோன் என செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.