திருச்சியில் முஸ்லிம் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற மீலாது நபி விழாவில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு .
திருச்சியில் முஸ்லிம் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற மிலாது நபி விழா .
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா வரவேற்புரையாற்றினார் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .
மேலும் இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட செயலாளர் அப்துல் லத்தீப், மாவட்ட தலைவர் ஜாகீர்கான், தலைமை செயலாளர் சாதிக்கான், மாவட்ட துணைச்செயலாளர் முபின், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், மாவட்ட பொருளாளர் சபீக், மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள், மாவட்ட துணைசெயலாளர் தினேஷ், முகமது அக்கீம், ஜவஹர், கஜா, அசோக், துபைல் அகமது, உறையூர் அகமது அலி, தென்னூர் அப்துல் காதர், பஜார் மைதீன், ஆரிபுல்லா,தஸ்தகீர் (எ) தஸ்தா உள்ளிட்ட 200 பேர் கலந்துகொண்டனர். 150 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
அமைச்சர் நேரு , முஸ்லிம் லீக் பேராசிரியர் காதர்மொய்தீன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஆகியோர் பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்கள்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.