அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் அண்ணா தொழிற்சங்க 50வது ஆண்டு தொடக்க விழாவில் அனைவரும் பங்கேற்க மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு .
அண்ணாவின் பிறந்தநாள் விழா மற்றும் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு தொடக்க விழா குறித்து தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
அண்ணா தொழிற்சங்க பேரவை 50-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் அண்ணாவின் 116- வது பிறந்தநாள் விழா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் நடைபெறும் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை 50-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் அண்ணா அவர்களின் 116- வது பிறந்தநாள் விழா.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், பொதுச்செயலாளர், பெல் அண்ணா தொழிலாளர் சங்க கார்த்தி தலைமையில் வரும் ஞாயிறு அன்று காலை 8.35 மணி அளவில் கணேஷா அருகில் உள்ள பெல் ஏடிபி சங்க வெளி அலுவலகத்தில் நடைபெற உள்ளது .
வில்லியம் பீட்டர்,
பெல் அண்ணா தொழிலாளர் சங்கம் தலைவர் வில்லியம் மீட்டர் வரவேற்புரை ஆற்ற உள்ளார் .
கழக அண்ணா தொழிற்சங்க பேரவை கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வழங்க உள்ளார் .
முடிவில் அண்ணா தொழிலாளர் சங்க பொருளாளர் மாடசாமி நன்றி உரை வழங்க உள்ளார் .
அதுசமயம் மாவட்ட கழக, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோன் என தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .