அண்ணா மற்றும் பெரியார் திருவுருவசிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு .
அ இ அ தி மு க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளான 15.09.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
மேலும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈ.வே.இராமசாமியின் பிறந்த நாளான 17.09.2024 செவ்வாய் கிழமைக்காலை 10.00 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் ஈ.வே.இராமசாமியின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர ,பேரூர் , கிளை, மாவட்ட கழக, பகுதி , வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்த வேண்டுகிறோம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.