பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள விழா குறித்து திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..
அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் அறிவுறுத்தலின்படி..
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு…
வரும் 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்
திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமு கழகம் சார்பில்
திருச்சி மேலசிந்தாமணி அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம்
மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .