சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் இன்று சிஐடியுவினர் கன்னட ஆர்ப்பாட்டம் .
2014 ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும்.
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், கடை நடத்தும் இடத்தில் வைத்து போட்டோ எடுத்து, அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
பி.எம் ஸ்வா நிதி திட்டத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை, கடந்த காலங்களில் தரைக்கடை வியாபாரிகள் அல்லாதவர்களுக்கு வழங்கியதைப் போல், தரைக்கடை நடத்தாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை கைவிட வேண்டும்.
தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும்.
வியாபாரிகளுக்கான வெண்டிங் கமிட்டியில் 3 ல் இரண்டு மடங்கு இடங்களை தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும்.
மாநகராட்சியின் அனைத்து பகுதியிலும் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, பின்னர் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.
வியாபாரிகள் சங்கத்தோடு கலந்து பேசிய பின்னர் தேர்தல் அறிவிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்
சார்பில் இன்று வியாழனன்று
மாநகராட்சி தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
தரைக்கடை சங்க
மாவட்ட தலைவர்
கணேசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி
சி ஐ டி யு மாநகர் மாவட்ட செயலாளர்
ரெங்கராஜன்,
தரைக்கடை சங்க
மாவட்ட செயலாளர் செல்வி,
மாவட்ட பொருளாளர் சுரேஷ்
ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள்
புஷ்பாகரன், அப்துல்லா, சேக்மொய்தீன்,
ரெத்தினம், பசுபதிராஜா, கணேசன், அமானுல்லா,
மணிகண்டன், கோபால், செந்தில், கோவிந்தன்
கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், நத்தர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.