திருச்சி மாநகரில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதால், மாநகராட்சி பகுதிகளில் நாளை புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்திருப்பது :
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகிக்கும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (செப். 10) பராமரிப்பு பணிகளையொட்டி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட இந்த நீரேற்று நிலையங்களிலிருந்து மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு குடிநீா் உந்தியனுப்ப இயலாது. எனவே, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (செப். 11) குடிநீா் விநியோகம் இருக்காது.
நாளை மறுநாள் வியாழக்கிழமை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.