திருச்சி உறையூர் ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோயிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் .
திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . எட்டாம் தேதி சிறப்பு பூஜையும், நேற்று மதியம் ஒரு மணி அளவில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது . அன்னதானத்தினை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ், மாவட்டத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாலை 6 மணி அளவில் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது .
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவருமான ஜி.டி.தினகர், லாக் குழு செயலாளர் பட்டாசு கண்ணன், முத்துராஜர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட புளியோதரை, பொங்கல்,சாம்பார் சாதம்,சுண்டல் ஆகியவை சூடாகவும் மிகவும் சுவையாகவும் இருந்தது என சாப்பிட்ட அனைத்து பக்தர்களும், பொதுமக்களும் விழா கமிட்டியினரை பாராட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.