டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கலெக்டரிடம் மனு . பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
திருச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கலெக்டரிடம் மனு .
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர செயலாளர் செந்தில்நாதன் பொதுமக்கள் நலன் கருதி திருச்சி மாவட்ட ஆட்சியாளரை இன்று நேரில் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது :-
உறையூர் லிங்கநகர் பகுதியில் சமீபத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி புதிதாக அரசு மதுபான கடை (Tasmac) திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட மது கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசலாலும், பாதுகாப்பு காரணங்களாலும் குறிப்பாக பெண்கள் மட்டும் குழந்தைகள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மீன் மார்க்கெட் அருகேயும் அமைந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசலால் உயிர் பலிகள் ஏற்படுகிறது.
இதே போல், திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான சீனிவாச நகர் மெயின்ரோடு பஸ் ஸ்டாப் அருகே, அங்கு வசிக்கும் மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது, அருகே கோவில் மற்றும் பள்ளிகள் உள்ளது.
இக்கடைகளால் மக்கள் படும் அவதிகள் குறித்து ஏதேனும் ஆதாரம் தேவைப்பட்டால், அவைகளையும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.
எனவே மக்களின் கோரிக்கைகளை ஏற்று, வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல், லிங்க நகர் மற்றும் சீனிவாச நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருதி உடனடியாக புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை மூடுமாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அம்மனுவில் கூறியுள்ளார்.
மேலும் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நம்மிடம் கூறிய போது திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இம்மானுவின் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் அமமுக நிறுவனத் தலைவர் டிடிவி அவர்களின் ஆலோசனைப்படி கூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் எனக் கூறினார் .