திருச்சி மேலப்புதூர் அருகே டிஇஎல்சி பிஷப் சைமன் நினைவு தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு பள்ளியுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் கிரேசி. இவரது மகன் சாம்சன்(வயது 31) அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். திருமணமாகாதவர்.
இவர் அடிக்கடி இந்த குழந்தைகள் விடுதிக்கு வருவாராம். அங்குள்ள மாணவிகள் சிலரிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர், பாதுகாவலர் மூலம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியிடம் புகார் செய்தனர்.
மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ஒவ்வொரு சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டர் சாம்சன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து டாக்டர் சாம்சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். பின் சாம்சன் மற்றும் அவரது தாயார் தலைமை ஆசிரியை கிரேசி சகாய ராணியும் சிறையில் அடைக்கப்பட்டார்.