திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம்.
திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மகள் விஜயலட்சுமி (வயது 16) இவர் உறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது தாய் சசிகலா உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
இதேபோன்று திருச்சி பொன்மலைப்பட்டி பூஜாதெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 73) இவரது மருமகன் வடிவேல் (வயது 37) இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
திருச்சி வந்திருந்த வடிவேல் சம்பவத்தன்று கீழ சிந்தாமணி புதுத்தெரு பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது உறவினர் செல்லையா கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலுவை தேடி வருகின்றனர்.