Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே வருமானம் உள்ள இடத்தில் பணி வேண்டுமா ரூ.4000 கொடு . ஓ ஏ சுரேஷின் அட்ராசிட்டி.

0

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம் ஆகும்.

இவ்வாறு புகழ்பெற்ற இத்திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர்களில்  இருந்தும் வந்து செல்கின்றனர் .

மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பது வழக்கம் . இதனால் பக்தர்களில் சிலர் அங்கு பணியில் இருக்கும் நபர்களுக்கு ரூ.500 முதல் 2000 3000 வரை பணம் கொடுத்து சாமியை குறுக்கு வழியில் சென்று தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்தக் கோவிலில் பணியாற்றி வரும் சூப்பர்வைசர் சுரேஷ் என்பவர் காவல் பணியில் உள்ளவர்களை முக்கியமான பகுதிகளில் ( வருமானம் உள்ள மூலஸ்தானம் போன்ற இடங்களில்) கும்பல் அதிகமாக உள்ளது இங்கு இரண்டு பணியாளர்கள் தேவை என இணை ஆணையர் கூறினார் எனக்கூறி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அங்கு கூடுதலாக செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்துவார் அதற்கு இங்கு நீங்கள் பணி செய்ய வேண்டுமானால் எனக்கு ரூ.4000 முதல் 5000 வரை தர வேண்டும் என கூறி அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அவ்விடத்தில் பணி அமர்த்துகின்றனர் சுரேஷ் மற்றும் வடிவேல்.

இதனால் பல செக்யூரிட்டி பணியாளர்களும் வருத்தத்தில் உள்ளனர் .

ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மிகவும் நேர்மையான அதிகாரி . இவரின் பெயரைக் கூறி இந்த சுரேஷ் செய்யும் அட்ராசிட்டிக்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பு .

Leave A Reply

Your email address will not be published.