Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவேரி கரையோரங்களில் குவிந்த புதுமண ஜோடிகள் . வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழா.

0

ஆடி மாதம் 18ந் தேதி ஆடிபெருக்கு விழா கொண்டாப் டாடப்படுகிறது. இந்த காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும்
நடைபெறுவது வழக்கம்.

ஆடிப்பெருக்கு விழா

தமிழகத்தில் காவிரி ஆறு ஓடும் ஓகேனக்கல் முதல் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி கரை ஒர பகுதிகளில் ஆடிப்பெருக்கு வழா கொண்டாடப்படுகிறது.ஆடிப்பெருக்கு நாளில் புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவர் அமையும் என்றும், திருமணமான பெண்களுக்கு கணவனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை. மேலும், ஆடிப்பெருக்கில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து காவிரி தாய்க்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடுவார்கள் மேலும், திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி கயிரை மாற்றி புது மஞ்சள் தாலி கயிறை அணிந்து கொள்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆடி பெருக்கு விழா இன்று கொண்டாப்பட்டது.

ஆர்ப்பரித்து ஓடும் காவிரி நீர்

கர்நாடகா மாநிலத்தில் தொடர்து மழை பெய்து வருதால் மேட்டூர் அணைக்கு காவிரி நீர் அதிகரித்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் அணையில் இருந்து நேற்று காலையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர் முக்கொம்புக்கு வந்து அங்கிருந்து காவிரிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி நீரும் கொள்ளிடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி நீரம் திறந்து விடப்பட்டது இதனால் காவிரி, கொள்ளிடத்தில்
நொங்கும் நுரையுமாக
ஆர்ப்பரித்து நீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகள் முழுவதும் மூழ்கும் அளவிற்கு நீர் நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தண்ணீர் நிரம்பி இருக்கும் திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட அனைத்து படி துறைகளையும் தடுப்பு கம்பிகள் அமைத்து முற்றிலும் பொதுமக்கள் செல்லாத வண்ணம் அடைத்து வைத்திருந்தனர்.

மாவட்ட நிர்வாகம் அறிவுரை

மேலும் பாதுகாப்பு இல்லாத அனுமதிக்கப்படாத இடங்களில் காவேரி ஆற்று பகுதியில் பொதுமக்கள் யாரும் நேரில் இறங்கி பூஜை மற்றும் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர்.மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் காவிரி படித்துறைகளில் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறியிருந்தார்.

பூ, பழம் வாங்கிய பொதுமக்கள்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காந்தி மார்க்கெட்டில்
ஆப்பிள்,ஆரஞ்சு, பலாப்பழம்,நவாப்பழம், திராட்சை,வாழைப்பழம்,சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் வாங்கினர்.ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழங்களின் விலை இரு மடங்காக உயர்ந்திருந்தது இதேபோன்று
பூஜைக்கு தேவையான மல்லிகை சாமந்தி ரோஜாப்பூ உள்ளிட்ட பூக்களின் விலையும்
அதிகரித்து இருந்தது.இருந்த போதிலும் பொதுமக்கள் முகம் சுளிக்காமல் கூடுதல் பணம் கொடுத்து பலன்கள் பூக்களை வாங்கிக் கொண்டனர்.

காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்

இன்று விடியற்காலை
5 மணிக்கு காவிரி ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குளிக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்த காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் இன்று காலை வீட்டில் இருந்தே குளித்து புத்தாடை அணிந்து உற்சாகமாக
திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அய்யாளம்மன்,சிந்தாமணி படித்துறைக்கு திரண்டு வந்தனர். இதில் குறிப்பாக ஏராளமான சுமங்கலி பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினர் திரண்டு வந்தனர்.
எப்பொழுதும் ஆடிப்பெருக்கு நாளில் காவேரி படித்துறையில் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டுபடித்துறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மா மண்டபத்தில் உள்ள சிமெண்ட் தளத்தில் வாழை இலை போட்டு அதில்
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதற்கு அருகம்புல் படைத்து முதலில் விநாயகரை வழிபட்டனர். பிறகு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் ஆகியவை வைத்து, விளக்கேற்றி, குல தெய்வத்தையும், காவிரி தாயை மனதில் நினைத்து வழிபட்டனர். மேலும் பல வகையான சாதங்கள் படைத்தும் வழிபடுட்டனர்.
பிறகு காவிரி தாய்க்கு சூடம் காட்டி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு உள்ள வேப்பமரத்திற்கு மஞ்சள்யிட்டு மஞ்சள் கயிறு கட்டினர்.
ஆடிப்பெருக்கில் தாலிச்சரடு மாற்றினால், கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். அதே போல திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் நல்ல கணவர் அமைய வேண்டும் என காவிரி தாயை வழிபட்டு, மஞ்சள் கயிறு கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் படித்துறை பகுதிகளில் பல பெண்களுக்கு மூத்த சுமங்கலிகள் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். மேலும்
புதிதாக திருமணமான தம்பதிகள் ஆற்றில் சென்று நீராடி, கிழக்கு முகமாக நின்று, தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களின் இல்லற வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் பெருகி வர வேண்டும் என வேண்டிக் கொள்வதும், ஆடிப்பெருக்கில் தாலிச்சரடு மாற்றினால், கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். மேலும், திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் நல்ல கணவர் அமைய வேண்டும் என காவிரி தாயை வழிபட்டு, மஞ்சள் கயிறு கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கமாகும். அந்த வகையில்
திருமணமான
புது பெண்களுக்கு
கணவன்மார்கள் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். பதிலுக்குபுதுமண பெண்கள் தங்களுடைய கணவருக்கு வலது கையில் மஞ்சள் கயிறு கட்டி அணிவித்தனர்.
மேலும் புதுமண தம்பதியினர் படித்துறையில் நின்று ஆற்றில் இறங்காமல் தங்களுடைய புது மாலையை ஆற்றில் வீசினர். மேலும் படித்துறையில் நின்று காவிரி தாயைப் பார்த்து இரண்டு கையை கூப்பி மனதில் நினைத்து வணங்கினர்.


பலத்த போலீஸ் பாதுகாப்பு

காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால்
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப் பட்டு இருந்தன. காவிரிகரை யிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் திருச்சி காவிரிகரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத் துறை, அய்யாளம் மன்படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்ட வாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டி யம், ஸ்ரீராமசமுத்திரம், ர் முசிறி, முக்கொம்பு, கொள்ளிடம் என திருச்சி மாவட்டத் தில் காவிரி, கொள்ளிடப் பகு தியில் அனு மதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் களை கட்டியது.

Leave A Reply

Your email address will not be published.