திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபரை கட்டையால் அடித்துக் கொன்ற 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது .
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்து நின்ற கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக் கொன்ற
5 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் ( வயது 17 ). இவர் திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வேதியியல் பாடம் பயின்று வந்தார்.
இந்நிலையில் நேற்று திருவரங்கம் கணபதி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ரஞ்சித் கண்ணன் சென்றுள்ளார். அப்பொழுது அந்த வீட்டின் அருகே உள்ள கீதாபுரம் பகுதியில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்தப் பகுதியில் மது அருந்து கொண்டிருந்த சிலர், வெளியூர் காரணுக்கு இங்கு என்ன வேலை என கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில்
படுகாயம் அடைந்த ரஞ்சித் கண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த சிலர் அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் கண்ணன் பரிதபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்த நவீன் குமார் (வயது 24) விஜய் (வயது 23)சுரேஷ் (வயது 25) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை பிடித்து திருவரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.