விபத்துகளை தவிர்க்க கம்பரசம்பேட்டை – முத்தரசநல்லூர் வரை இரு வழி சாலை அமைக்க கோரி ரெட் பிளாக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஆட்சியரிடம் மனு .
ரெட் பிளாக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கோபால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு ஒன்று அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது :-
எமது ரெட் பிளாக் கட்சி நீண்ட நெடிய காலமாக மக்கள் அனுபவித்து வரும் கொடிய விஷயமான சாலை விபத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தங்களின் மேலான கவனத்திற்கு

முக்கொம்பு ரோடு திருச்சி கரூர். கோவை பிரதான கம்பரசம்பேட்டையில் இருந்து முத்தரசநல்லூர் வரை மிக நீண்ட நெடிய வருடமாக சமீப கால வரை அதிகளவு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.
எனவே கம்பரசம்பேட்டையில் இருந்து முத்தரசநல்லூர் வரை இரு வழிச்சாலையாகவும் அனைத்து வாகனங்களும் மிக குறைந்த வேகத்தில் பயணிப்பதற்கும் மற்றும் பாதசாரிகளும் அனைத்து வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக அந்த சாலையை கடப்பதற்கு என்னென்ன வழிவகை இருக்கிறது என்பதை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் மக்களின் உயிர் காக்க ரெட் பிளாக் கட்சியின் கோரிக்கை உங்கள் முன்னே தாய் உள்ளத்துடன் பரிசீவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.