கண்ணகிகுல செட்டியார்கள் பேரவையின் அரசியல் பிரகடன 2வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில் 2-வது மாநில பொதுக்குழு நடைபெற்றது : தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தீர்மானம் .
கண்ணகி குல செட்டியார்கள் பேரவை, தமிழ்நாடு அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கமாக செயலாற்றி வருகிறது. இதன் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்தியம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மகாலில் நடைபெற்றது.

கண்ணகி குல பூவையர் பாசறை மாநில பொதுக்குழு நித்யா கல்யாணசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமண குமார் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழுவில் தலைமை ஒருங்கிணைப் பாளர் பாபு பத்மநாபன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மங்கள தேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் பி.எஸ்.எம்.முருகன் வாழ்த்துரை வழங்கினார் .
நிகழ்ச்சியில் சத்யம் குரூப்ஸ் நிறுவனங்கள் சென்னை சேர்மன் எஸ்.பி.என். சத்தியமூர்த்தி, என்.எம். மருத்துவமனை ஆர். நடராஜன், நகரத்தார் நமது செட்டிநாடு வரலாற்று எழுத்தாளர் இளங்கோ, அரசு மெடிக்கல் குரூப் சேர்மன் சேதுராமன், பேராவூரணி எஸ்.டி.டி. பஸ் நிறுவனங்கள் சிதம்பரம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெ.ராஜசேகர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் மேகமலை கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடும் வகையில் பளியங்குடி வழியாக பாதை அமைத்து உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணகி கோவிலை கேரள மற்றும் தமிழக அரசுகள் கம்பம் மங்கள தேவி அறக்கட்டளையிடம் கோவில் மற்றும் அதற்கான நிலத்தை ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். 5 பெருங்குடிகள் கொண்ட பழந்தமிழ் செட்டியார்கள், கண்ணகி குல வேள் வணிக செட்டியார்கள் என்ற பொதுப் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். செட்டியார்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 38 மாவட்டம் 234 தொகுதிகளில் 1000 புதிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிப்பது, பேரவையின் தலைமைக்கான ஐம்பெருங்குழுவில் 500 பேரை நியமிப்பது, ரேஷன் கடைகள் முழுவதிலும் 100 சதவீத அரசு வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் . சுதந்திரப் போராட்ட வீரர் பாகனேரி சிங்கம் செட்டி வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.