தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திருச்சி மத்திய சிறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த பின் சி.வி.சண்முகம் பேட்டி .
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
திருச்சி மத்திய சிறையில் எம்.ஆர்.
விஜயபாஸ்கரை சந்தித்தபின் சி.வி.சண்முகம் பேட்டி.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுக அமைப்புச் செயலாளரும்,
நாமக்கல் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி, அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முன்னதாக, திருச்சி வந்தடைந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி சண்முகம் ஆகியோருக்கு, திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது ஜெயில் வளாகத்தில்
அதிமுக அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், ‘எஸ்.வளர்மதி,.மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட துணை செயலாளர் வனிதா,
மாவட்ட ,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி,ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும். கவுன்சிலருமான கோ.கு.அம்பிகாபதி,
இளைஞரணி முத்துக்குமார்,மாணவரணி இன்ஜினியர் இப்ராம்ஷா,வழக்கறிஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் முல்லை சுரேஷ்,வக்கீல்கள் சசிகுமார், ஜெயராமன்,பகுதிச் செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, சுரேஷ்குப்தா, அன்பழகன், ரோஜர், ராஜேந்திரன் ஏர்போர்ட் விஜி ,மற்றும் நிர்வாகிகள் இன்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு, இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம்,மார்க்கெட் பிரகாஷ்,எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,
வடக்கு மாவட்ட பொருளாளர் சேவியர், மாணவர் அணி செயலாளர் அறிவழகன் , மீனவரணி பேரூர் கண்ணதாசன்,மாணவரணி அறிவழகன், பாசறை சோனா விவேக், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், இலக்கிய அணி ஜெயம் ஸ்ரீதர்
ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி. முத்து கருப்பன், ஜெயக்குமார்,
தெற்கு மாவட்டம் சார்பில் பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, முன்னாள் எம்எல்ஏ கள் சின்னச்சாமி, சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன், . டி.என்.சிவகுமார் சூப்பர் நடேசன்,நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சண்முக பிரபாகரன், லால்குடி எஸ்.எஸ் விக்னேஷ், லால்குடி பிரவீன் வழக்கறிஞர் தர்மராஜ் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது .அதை தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார். அது எப்போதும் நடக்காது.
இன்றைக்கு முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என்று நிரூபித்து அவர் விரைவில் வெளியே வருவார்.
தமிழகத்தில் சட்டம் இருந்து சந்தி சிரிக்கிறது ,
இவ்வாறு அவர் கூறினார்.