திருச்சி தீரன் நகரில்
தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.
திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் நகரில் தனியார் நிறுவனத்திற்கான ஏர்கூலர் குடோன் உள்ளது. அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 11 ஏர்கூலர்களை திருடி சென்றனர் .
இது குறித்து தனியார் நிறுவன குடோன் மேலாளர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 28) என்பவர் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசுமதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்களை திருடியதாக திருச்சி பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த சாமுவேல் கிறிஸ்டியன் (வயது 20 ),பாலக்கரை துரைச்சாமி புரத்தைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 22) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு ஏர்கூலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதும் உள்ள ஏர் கூலர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது .