Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை பணிமனை முன் எஸ் ஆர் எம் யூ ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

 

Ad banner

பொன்மலை பணிமனை முன்
எஸ் ஆர் எம் யூ
ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை தகர்த்து உத்தரவாத பென்சன் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை ஆர்மரிகேட் முன்எஸ் ஆர் எம் ஏ தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TVK ad

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான
எஸ் ஆர் எம் ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்
ரெயில்வே துறையில் செய்து வந்த பல வேலைகள் அவுட்சோர்ஸ் என்ற பெயரில் தனியாரிடம் தாரைவார்ப்பதை தடுத்திட வேண்டும்.
இதனால் ரெரயில்வே தொழிலாளர்களின் பணி இழப்பு மட்டுமின்றி,
பொது மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாவதை தடுத்திட வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
மத்திய அரசு அறிவித்தபடி ஆண்டிற்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை
வழங்க வேண்டும் என்றும்,
குறிப்பாக என் பி எஸ் என்ற புதிய பென்சன் திட்டத்தில் பணி ஓய்வின் போதும், ஓய்வூதியம் பெறும் போதும் பலன் இல்லாத அந்த திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது போல் உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டத்தை பெற வேண்டும்என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ் ஆர் எம் யு தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.