அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட ஒரு இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும் .
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) கட்சியில் கணக்கு கேட்டதற்காக மு.கருணாநிதி அவரை கட்சியில் இருந்து நீக்கியதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த அணியாக 1972 அக்டோபர் 17 அன்று மதுரையில் தொடங்கப்பட்ட திராவிடக் கட்சி இது.

அண்ணா கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கையை கட்சி கடைபிடிக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கட்சி ஏழு முறை பெரும்பான்மை பெற்றுள்ளது . தேசிய மற்றும் மாநில அரசியல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அரசியல் அமைப்பாக உள்ளது.
தற்போது தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதிமுகவில் அடிப்படை தொண்டனாக பணியாற்றுவதில் கூட பெருமை என கூறுபவர்கள் உண்டு.
இந்நிலையில் திருச்சியில் அதிமுக தொண்டர்களை சிறப்பாக ஒருங்கிணைத்து சிறப்பாக செயலாற்றி வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் கழக உறுப்பினர் அட்டையை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பெற்றுக் கொண்டார் . இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி , திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மற்றும் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .