காவிரி ஆற்றின் குறுக்கே ரூ106 கோடியில் புதிய மேம்பாலம், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இன்று அடிக்கல் நாட்டினர்.
திருச்சி – திருவரங்கத்தை இணைக்கும் வகையில்
காவிரி ஆற்றின் குறுக்கே
ரூ106 கோடியில் புதிய மேம்பாலம்
அமைச்சர்கள் கே.என்.நேரு,
மகேஷ் பொய்யாமொழி இன்று அடிக்கல் நாட்டினர்.
திருச்சி மற்றும் திருவரங்கத்தை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே ரூ106 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில், இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திருச்சி மாநகரையும், திருவரங்கத்தையும் இணைக்கும் வகையில் எற்கெனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே திருச்சி- திருவரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில்
கொண்டு தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பபட்டது. இப்பாலத்திற்கான நிர்வாக
ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணி ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்குபுறத்தில் திருச்சி மேலசிந்தாமணியிலிருந்து மாம்பழச்சாலை வரை 545 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலமுள்ள நடைபாதையுடன் சேர்த்து 17.75 மீட்டர் அகலத்தில் நான்கு வழித்தடங்களுடன் அமைகிறது.
இதற்கென ரூ.106 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இதில், பாலம் கட்டுமானத்துக்கு ரூ.68 கோடியும், நில ஆர்ஜிதத்துக்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர அணுகுசாலைகள், ரவுண்டானா கட்டுமானம், மின்வசதி, மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு மீதித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பால பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா, நகராட்சி நிருவாக துறை
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது.
இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பாலம் கட்டுமானத்துக்காக மேல சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் இடங்கள் மற்றும் மாம்பழச்சாலை பகுதியில் மகளிர் காவல் நிலையம், திருவரங்கம் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட சில அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன.
இன்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயரும்,மாநகரச் செயலாளருமான அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் சரவணன், நகர் ஊரமைப்பு துறை உறுப்பினரும், மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வைரமணி, மண்டல குழு தலைவரும், மாநகர செயலாளருமான மதிவாணன், திருவரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார்,அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மாவட்ட துணை செயலாளர் அல்லூர் மு. கருணாநிதி, முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.