திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் இன்று காலை 10 மணி அளவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ். முதன்மை மனித வள அதிகாரி கணபதி சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு தொழிற்சாலையின் மனிதவள கோட்பாடுகளையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வேலை பெற தேவையான திறன்கள் பற்றியும் திறன்களை வளர்க்கும் வழிகள் குறித்தும், பல்வேறு நிகழ்கால எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் டி.சுகுமார் அவர்கள் வரவேற்று பேசினார்.
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி திருபிரதிவ்சந்த் வாழ்த்துறை வழங்கினார்.
இவ்விழாவில் துறைதலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் ராபர்ட் நன்றியுரை வழங்கினார்.