Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிட உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, டி ஆர் பி ராஜா, பங்கேற்பு .

0

'- Advertisement -

 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர், முகநூல்( facebook), youtube, ரீல்ஸ், தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது .

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திண்டுக்கல் லியோனி,
திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Suresh

கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகி வன்னை அரங்கநாதன், பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், முரளி கிருஷ்ணன், உமாராணி ஆகியோர் நன்றி கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.