திருச்சி அரசு மருத்துவமனையில் பல நூறு அரசு பணியாளர்கள் அதாவது நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என பல பிரிவின் கீழ் பணி புரிந்து வருகின்றனர்.
இதில் CM CHIS முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் பணியில் சேர்வதற்கு முன் இவர்களது சான்றிதழ்களை முறையாக பரிசோதனை செய்வது இல்லை, மேலும் இவர்கள் மேல் வழக்கு உள்ளதா என காவல் துறையிடம் NOC அதாவது தடையில்லா சான்று வாங்குவதும் இல்லை .
இவர்களில் பலருக்கு ரவுடி கும்பலுடன் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
எனவே முறையாக காவல் துறை தடையில்லா சான்று வாங்கி பணி அமர்தினால் அரசு மருத்துவமனையில் தினதோறும் நடைபெறும் செல்போன் திருட்டு, வாகன திருட்டு, பணம் பெற்றுக் கொண்டு நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவது, போன்ற குற்ற நடவடிக்கைகள் குறையும் என் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .