திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல். கொள்ளையடிக்கப்பட்டதா ?
திருச்சி ரெயில் நிலையத்தில்
2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல்.

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரெயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. அந்த ரெயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரெயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்தனர். பிறகு அவரிடம் விசாரணை நடத்தினர் அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.பிறகு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சோதனையில் அவர் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என தெரியவந்தது.
அவரது பையில் புதிய தங்க நகைகள் பல பெட்டிகளில் இருந்தது. இது போல ரொக்கப்பணமும் கட்டு கட்டாக இருந்தது.
தங்க நகைகள், பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இந்த நகைகள் , நகைகடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா, கடைகளில் நகைகளை கடைகளில் சப்ளை செய்து விட்டு வசூலித்து வைத்திருந்த பணமா என்பது குறித்தும், பணம், நகைகள் யாருக்கு செல்கிறது, அல்லது கொள்ளை அடிக்க பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திருச்சி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,