
திருவரங்கத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் கைது
திருவரங்கம் கீதாபுரம் பஸ் நிறுத்த பகுதியில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு 2 வாலிபர்கள் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருவரங்கம் மண்டபம் சாலை பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 23) சுரேஷ் (வயது 25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.