சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி .1500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.
இன்று காலை சாக்சீடு தொண்டு நிறுவனம் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி இணைந்து அகில உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
சாக்சீடு இயக்குனர் சகோ.பரிமளா வரவேற்புரையுடன்,
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் சகோ. இசபெல்லா ராஜகுமாரி, போதை ஒழிப்பு தின உறுதிமொழியை முன்மொழிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் காமினி போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து சிறப்புரை யாற்றினார்.

திருச்சிராப்பள்ளி வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் விவேகானந்தான் மற்றும் உதவி ஆணையர் நிவேதா கலந்து கொண்டனர்.
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி மாணவ மாணவியர், காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள், இந்திராகணேசன் கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 1500 பேர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியானது சாக்சீடு நிறுவனத்தில் துவங்கி பிஷிப் ஹீபர் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. பள்ளியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புனித சிலுவை கல்லூரி மாணவியர் நடத்தினர். CWC உறுப்பினர் டாக்டர். பிரபு போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு வழங்கினார்.
ஆர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டயஸ் நன்றி உரையாற்றினார்.