மாணவியின் மர்ம சாவு பற்றி கேள்விக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி உரிமையாளரும் திமுக எம்எல்ஏவுமான கதிரவன் காட்டமான பதில். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வாரா திருச்சி மாவட்ட எஸ்பி ?
மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில், அமமுக நகரச் செயலாளர் மகள் மர்மச்சாவு.

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி டெக் ஐடி படித்து வந்த மாணவி தாரணி (வயது 19) மர்ம மரணம். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் தந்தை பாலாஜி, மானாமதுரை அமமுக நகரச் செயலாளராக உள்ளார். மாணவி படித்த கல்லூரி, திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமானது என்பதால் மாணவியின் மர்ம சாவு குறித்து தங்கள் கல்லூரியில் நடந்தது என்ன என்ற நிருபரின் கேள்விக்கு கதிரவன் எம்எல்ஏ காட்டமாக விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார்.
எம்எல்ஏ காட்டமாகவும் அலட்சியமாகவும் பதில் கூறுவதால் கல்லூரி நிர்வாகத்தில் ஏதோ நடந்துள்ளது எனவே திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு .