திருச்சியில் ஜானகியின் 100 டூயட் பாடல்களை தொடர்ந்து 10 மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர் .
கண்மணி அன்போடு என்ற தலைப்பில் பாடகி S.ஜானகி அவர்களின் 100 டூயட் பாடல்கள் தொடர்ந்து பத்து மணி நேரம் பாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனார்.

இந்த நிகழ்ச்சி தீரன் நகர் எஸ்ஏஎஸ் மகாலில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி வெங்கட், திரைப்பட பின்னணி பாடகி சுர்முகி ராமன், திலகரஞ்சனி, சித்ரா திருவாளன்,ஜெயந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பினிக்ஸ் குழுவினர் மற்றும் கைண்யா சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனர்கள் வழக்கறிஞர் அகிலாண்டேஸ்வரி, ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனார்.