திருச்சியில் மணல் திருடும் கும்பலின் முழு விவரம் .இதை பார்த்தாவது நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ?
மணல் மாபியாகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 25 காவலர்களை ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்தார் திருச்சி எஸ் பி .
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடும் ஏவிம் மணி டிப்பர் வடிவு , இ.ஆர்.வி. விஜி , விஜயகுமார், தியாகு , செல்வவராயன் , திமுக ஸ்ரீரங்கம் பகுதி பொருளாளர் ஞானசேகரன், ஆகியோர் கொள்ளிடம் கரை வழியில் பட்டர்பிளை பார்க் செல்லும் வழியில் அரசமரம் வேரோடு தொங்கும் ஒரு மரத்தின் கீழ் 20 லோடு கட்டிட வேஸ்ட் மணல் மற்றும் குப்பைகளை வைத்துள்ளார்.
ஏவிஎம் மணி .
இது எதற்காக என்றால் ஆற்றில் ஒரு மண் லோடு எடுத்தால் அந்தப் பள்ளத்தை நிரப்புவதற்கு குப்பைகளை அங்கு சென்று கொட்டி விடுவார் .

இவர் குப்பை மணலை கொட்டி வைத்திருக்கும் இடம் பொதுப்பணித்துறையின் இடம். இது மொத்தம் அஞ்சரை ஏக்கர் . இந்த பொதுப் பணித்துறை இடத்தின் வழியாக சென்று தான் அனைத்து வாகனங்களும் மணல் அள்ள ஆற்றுக்குள் சென்று வருகிறது.
பொதுப்பணி துறையில் பணியாற்றும் அன்பு கணேசன் என்பவரது அண்ணனின் பராமரிப்புல்தான் இந்த இடம் உள்ளது .
அன்பு கணேசனின் அண்ணனின் மகள் திருமணத்திற்காக ரூ.13 லட்சத்தை தந்துள்ளார் மணி.
இப்படி பல்வேறு வகையில் பணம் செலவு செய்து மணல் திருடும் இந்த கும்பலை நேர்மையாக செயல்படும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அவர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு .