
திருச்சி மேலப்புதூரில்
மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது – 3 பெண்கள் மீட்பு.
திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி,சப் இன்ஸ்பெக்டர் நளினி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாலக்கரை பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள மஜாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது .இது தொடர்பாக திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் செல்வம் உள்ளிட்ட சிலர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது இரண்டு செல்போன்கள், ஐந்தாயிரம் பணம் மற்றும் பணம் செலுத்தக்கூடிய ஸ்வைப் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது.