திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை. 4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை
திருவானைக்காவலில் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொன்று 5 பவுன் நகை கொள்ளை.
4 வாலிபர்களிடம் தனிப்படை விசாரணை
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேசாயிஅம்மாள் (வயது 95).
கணவர் மற்றும் மகன் ஆகியோரை இழந்த இவர் அங்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் தனியாக வசித்து வந்தார். இந்த வீட்டின் அருகில் 3 சிறிய வீடுகள் அவருக்கு சொந்தமாக உள்ளது. இதனை வாடகைக்கு கொடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.
கழுத்தை நெரித்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் செயின், தோடு மற்றும் நகைகளை
கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.
இந்த மூதாட்டியின் வீட்டின் அருகாமையில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை இருப்பினும் அந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
நிலையில் மூதாட்டி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆத்தனுர் பகுதியைச் சேர்ந்த அவர்கள் விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.