எனக்கு வாக்களித்த தன்னலமற்ற இதயங்களுக்கும், ரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. திருச்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன் அறிக்கை
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், செந்தில்நாதன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மனங்களை வென்ற ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
போட்டியில் இரண்டே முடிவுகள் தான்
வெற்றி அல்லது தோல்வி.
ஆனால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பதே பலருக்கு எப்பிறவியிலும் வாய்க்காது.
அப்படி பல லட்சத்தில் ஒருவருக்கு கிட்டும் வாய்ப்பை எனக்கு நல்கிய அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் அவர்களுக்கு எனது பெருமைமிகு, நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒரு பக்கம் இந்நாள் அமைச்சர்கள்.. மறு பக்கம் முன்னாள் அமைச்சர்கள்..
ஆனாலும்..

கடந்த இரண்டு மாதங்களாக என்னுடன் இணைந்து, இருக்கும் வசதிகளை வைத்து, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல், உதிரத்தை வேர்வையாக்கி, நேர்மையாக தேர்தல் வேலை செய்த, அமமுக உதிரங்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வென்றால் மக்கள் பணி.
தோற்றால் கழகப் பணி..
விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம்.
எனவே..நாளை முதல் நமக்கான பணிகள் இருக்கின்றன.
நடந்து முடிந்த திருச்சி நாடாளுமன்ற தேர்தலில், மண்ணின் மைந்தனான எனக்கு, களப்பணியாற்றிய “தேசிய ஜனநாயக கூட்டணி”யின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும்,
திருச்சி நாடாளுமன்றத்தின் வளர்ச்சி பாதையை மனதில் கொண்டு, எனக்கு வாக்களித்த “தன்னலமற்ற” இதயங்களுக்கும்,
உறுதுணையாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி நன்றி நன்றி.
என்றும் உங்கள் பணியில்,
ப.செந்தில்நாதன்
,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என செந்தில்நாதன் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியுள்ளார் .